Monday, April 11, 2011

வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம்


எம்மால் மட்டும் ஏன் இப்படி நிம்மதியாக வாழ முடிவதில்லை. வாழ்க்கையை மீள்ளாய்வு செய்வோம். குறைந்த பட்சம் ஒரு பறவை போலாவது வாழப் பழகிக்கொள்வோம்.

ஒரு ரோஜா மலர்கிறது

இந்த ரோஜா மலர்வது போல் நம் மனதில் நம்பிக்கைகள் வளருமா?

Sunday, April 10, 2011

கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்." - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்காணல்

கடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாக வென்று, ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை அறிவித்த ஊடகங்கள், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அலை பரவுவது போலவும், பெருமளவு மக்கள் இனவெறிக் கட்சிகளுக்கு வாக்களித்தது போலவும் பிரமையை தோற்றுவித்துள்ளன. வேற்றினத்தவருக்கு எதிராக இனவாதம் பேசும் கட்சிகள் கணிசமான வாக்குப் பலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவானது உண்மை தான். ஆனால் இவை ஒப்பீட்டளவில் மிகக் குறைவான ஆசனங்களையே பெற்றுள்ளன.

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத வில்டர்சின் கட்சி நான்கு ஆசனங்களையும், பிரித்தானியாவில் குடிவரவாளர்/அகதிகளுக்கு எதிரான BNP இரு ஆசனங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்க வெற்றி தான். புதிய அங்கத்துவ நாடுகளான ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலும் வேற்றினத்தவரை சகித்துக் கொள்ளாத கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை தன்னிலும் பெற்றுள்ளன. இதே நேரம் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரிகள் தோல்வியுற்றுள்ளன.

தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஊடகங்கள், தீவிர இடதுசாரிக் கட்சிகளின் வெற்றியை இருட்டடிப்பு செய்ததன் மர்மம் என்ன? அயர்லாந்தில் (திரொஸ்கிச) உழைப்பாளர் கட்சி இரு ஆசனங்களையும், செக் குடியரசில் (மார்க்சிச லெனினிச) கம்யூனிஸ்ட் கட்சி நான்கு ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிற ஐரோப்பிய மக்கள் அறியக் கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக நடந்து கொள்கின்றன.

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத பேச்சுகளால் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக, தீய வழியில் பிரபலமடைந்துள்ள வில்டர்சின் வெற்றியை அடுத்து, பரவலான ஊடக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றிரவே, ஐரோப்பிய ஊடகங்களில் "வில்டர்ஸ் புராணம்" களை கட்டியது. டென் மார்க் தொலைக்காட்சி ஒன்று வில்டர்சை அழைத்து செவ்வி கண்டது. வில்டர்ஸ் இந்த நேர்காணலில், ஐரோப்பாவில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருபது மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2025 ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி விடும். அப்போது ஐரோப்பாவில் மூன்றில் ஒருவர் முஸ்லீமாக இருப்பர்." என்று பூச்சாண்டி காட்டுகின்றார். "முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்க மறுப்பதாகவும், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும், ஜிஹாத் ஆதரவாக இருப்பதாகவும்..." இவ்வாறு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.

இதுவரை காலமும் நவ-நாசிச, பாசிச கட்சிகளே, மேற்குறிப்பிட்ட பொய்யான தரவுகளை பரப்புரை செய்து வந்தன. தற்போதெல்லாம் வில்டர்ஸ் போன்ற பாசிஸ்ட்கள் "வெகுஜன அரசியல்வாதிகள்" என்ற போர்வையில் இனவெறி நஞ்சை கக்குகின்றனர். வில்டர்ஸ் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் பல நவீன பாசிச அகராதியில் இடம்பெறத்தக்கவை. முஸ்லிம்கள் ஐரோப்பாவை "காலனிப்படுத்துவதாக", காலனியத்திற்கு புதிய விளக்கம் கொடுப்பார். தன்னை எதிர்க்கும் வெளிநாட்டவரை "இனவெறியர்கள்" என்றழைப்பார். வீதியில் ரவுடித்தனம் செய்யும் வேலையற்ற பொறுக்கிகளுக்கு "தெருப் பயங்கரவாதிகள்" என நாமம் சூட்டியுள்ளார்.

குறிப்பாக மொரோக்கோ குடிவரவாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்மை தான். இருப்பினும் அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொகையினர் தான். பெரும்பான்மை மொரோக்கோ சமூகத்தினர் தாமுண்டு, தமது வேலையுண்டு என்று அமைதியாக வாழ்பவர்கள். ஒரு சில கிரிமினல் இளைஞர்களை உதாரணமாகக் காட்டி, முஸ்லிம்கள் அனைவரையும் கிரிமினல்களாக காட்டும் வில்டர்சின் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். தற்போது "முஸ்லிம்களை மட்டும் தானே வெளியேற்றுவார்கள்." என்று பிற சிறுபான்மை சமூகத்தினர் அலட்சியமாக இருந்தால், அவர்களுக்கும் அந்த நிலை வர அதிக காலம் எடுக்காது. கிரிமினல் செயல்களில் ஈடுபடுவோர், புலம்பெயர்ந்த நாட்டில் குறுந்தேசியவாதம் பேசுவோர் பிற சமூகங்களிலும் உள்ளனர். அவர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வாழும் அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. ஐரோப்பிய பேரினவாதிகள் அதனை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர். தீவிரவாத முஸ்லிம்களால் மொத்த ஐரோப்பிய சமூகத்திற்கும் ஆபத்து என்று பயமுறுத்துவதன் மூலம், பெரும்பான்மை ஆதரவை திரட்டிக் கொள்கின்றனர். அரபு-முஸ்லிம்களல்லாத பிற சமூகங்களான துருக்கியர், குர்தியர், பஞ்சாபியர், தமிழர் மத்தியில் குறுந்தேசியவாத அரசியல் செல்வாக்கு அதிகம். தற்போது இவர்களின் தேசிய இன அரசியல், ஐரோப்பிய பேரினவாதத்திற்கு எதிரானதல்ல போன்று தோன்றலாம். ஆனால் ஐரோப்பா முழுவதும், ஒரே கலாச்சார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடும் பேரினவாதத்தின் பாதையில் இவையெல்லாம் தடைக்கற்களாக தெரிகின்றன.
வில்டர்ஸ் பற்றிய மேலதிக தகவல்களை எனது முன்னைய பதிவுகளில் வாசிக்கலாம்.
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்


டென் மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்டேர்சின் நேர்காணல் வீடியோ (in English):


Geert Wilders in Denmark: Deporting millions of Muslims may be necessary 

முஸ்லிம் அநாதைகள்

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத்َضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் அறிவித்தார்கள்:
“நானும் – அநாதையைப் பராமரிப்பவனும், மற்ற தேவைகள் உடையோரைப் பராமாரிப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம். இதைச் சொல்லிவிட்டு அண்ணலார் நடுவிரலையும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். (புகாரி)

அறிவிப்பாளர் : அபூஹுரைராَضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
“எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் கோபமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும். (இப்னு மாஜா)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْهُ
ஒரு மனிதர் நபி 
صلى الله عليه وسلم அவர்கள் தன் கல்நெஞ்சம் பற்றி முறையிட்டார். அண்ணலார், “அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள், ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்!” என்று கூறினார்கள். (மிஷ்காத்)
அறிவிப்பாளர் : குவைலித் பின் உமர் َضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் “என் இறைவா! நான் இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய்க் கருதுகின்றேன்: 1. அநாதையின் உரிமை 2. மனைவியின் உரிமை.” (நஸயீ)
அறிவிப்பாளர் : ஜாபிர் َضِيَ اللَّهُ عَنْهُ
நபி 
صلى الله عليه وسلم அவர்கள் வினவினேன்: “என் பராமாரிப்பில் இருக்கும் அநாதையை எந்தெந்த காரணங்களுக்காக நான் அடிக்கலாம்?” அண்ணலார் கூறினார்கள்: “எந்தக் காரணங்களுக்காக உம் சொந்தக் குழந்தைகளை அடிப்பீரோ அந்தக் காரணங்களுக்காக மட்டுமே அவர்களை நீர் அடிக்கலாம். எச்சரிக்கை! உம் செல்வததைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அநாதையின் செல்வத்தை அழிக்கக் கூடாது. அநாதையின் செல்வத்தால் உம் சொத்தைப் பெருக்கிக் கொள்கக்கூடாது.” (முஃஜம் தபரானீ)

ஹலால் செக்ஸ்


சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது "Online இஸ்லாமிய செக்ஸ் கடை", இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான் இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் " இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை." திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறும் பொழுது: "நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது. திருமணமான தம்பதிகளுக்கு தேவையான தாம்பத்திய வாழ்வை திருப்தி செய்யும் பொருட்களையே விற்கிறேன்." என்றார். இதிலே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், பாலியல் வக்கிரங்களை சந்தைப் படுத்தும் சாதாரண மேற்கத்திய செக்ஸ் கடையைப் போல இதனைக் கருத முடியாது. இருப்பினும் நெதர்லாந்து ஊடகங்கள், இதை ஏதோ இஸ்லாமிய மதத்தினரிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சி என்பதைப் போல சித்தரித்திருந்தன.

பாலியல் கேளிக்கைப் பொருட்களை விற்கும் செக்ஸ் கடைகள், முதலாளித்துவம் கோலோச்சும் சர்வதேச நகரங்களில் சாதாரணமாக காணப்படும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசியாவில் இந்து /பௌத்த/கிறிஸ்தவ பழமைவாதம் பேணும் நாடுகள், ஆகிய இடங்களில் மட்டும் இவை காணப்படுவதில்லை. தனி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்ற சூத்திரம் முதலாளித்துவத்தின் அடிப்படை. அதன் பிரகாரம் எதோ ஒரு வகையில் செக்ஸ் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. "இன்டர்நெட்" என்ற மகத்தான கண்டுபிடிப்பு அதற்கு உதவுகின்றது. ஏதாவது நாடு அதை தடை செய்யும் பட்சத்தில், "தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறார்கள்" என்று அந்த நாடு மீது குற்றம் சாட்ட முடியும்.

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பகிரங்கமாக செக்ஸ் கேளிக்கைப் பொருட்கள் விற்கும் கடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் அவை கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ரகசியமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.



 அல்லது சில சட்டவிரோத வியாபாரிகள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள். தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள்,பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு "கலாச்சார மோதல்", "அல்கைதா அபாயம்", "மத அடிப்படைவாதத்தை அடக்குதல்" என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது.

கம்யூனிசத்திடம் இருந்து விடுதலையான ரஷ்யா முதல், இஸ்லாமிய அடிப்படைவாதத்திடம் இருந்து விடுதலையான ஆப்கானிஸ்தான் வரை பரவி வரும் சமூகச் சீரழிவுகளுக்கு தனி மனித சுதந்திரம் என்று பெயர் சூட்டப்படுகின்றது. இத்தகைய "விடுவிக்கப் பட்ட பகுதிகளில்" பாலியல் தொழில் அமர்க்களமாக நடக்கின்றது. பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கூட குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சமுதாய சீர்குலைவுக்கு காரணமான வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அதனால் "கம்யூனிசமும், இஸ்லாமும் தனி மனித சுதந்திரங்களை அடக்கி வைத்திருந்தார்கள்." என்று நாமும் விளக்கம் கூறக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்குலக பல்கலைக்கழகங்கள் இதை "கலாச்சாரங்களின் மோதல்" என்று வரைவிலக்கணம் கொடுக்கின்றன. தாலிபானும், அல்கைதாவும் அதையே "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரத்திற்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் போராட்டம்" என்று
திருப்பிப் போடுகிறார்கள். யாழ்ப்பாண தமிழர்களிடையே கலாச்சார சீர்குலைவு காணப்பட்டால், அதனை "தமிழர்கள் மீதான சிங்களவர்களின் சதி" என்பார்கள் தமிழ் தேசியவாதிகள். தென்னிலங்கை கடற்கரைகளில் வெள்ளையின உல்லாச பயணிகளின் காமவெறிக்கு இரையாகும் (சிங்கள) சிறுவர்கள் பற்றி இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மதவாதிகள், தேசியவாதிகள் எல்லோரும் இதனை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கின்றார்கள். இவர்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினை ஒன்று தான். சமூக சீரழிவுகளுக்கு காரணம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பதை நம்ப முடிவதில்லை.

மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக "ஹலால்" பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், "ஹலால் சந்தையில்" ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள். "இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே" என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள். நெதர்லாந்தின் மிகப் பெரிய சூபர் மார்க்கட் நிறுவனம் (Albertheijn) தனது கடைகளில் ஹலால் முத்திரை இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றது. இந்த ஹலால் வியாபாரத்தில் புதிய வரவு "சைக்கிள் கம்பனி".

நெதர்லாந்து ஒரு சைக்கிள்களின் நாடு என அழைக்கலாம். ஐரோப்பாவில் இந்த நாட்டில் தான் சைக்கிள் பாவனையாளர்கள் அதிகம். ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சைக்கிள் பாவிப்பது குறைவு. அவர்கள் அநேகமாக கார், அல்லது மோட்டார் சைக்கிளையே நாடுகின்றனர். வெளிநாட்டு குடிவரவாளர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்வது பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. அதனால் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கேற்ற "ஹலால் சைக்கிள்" தயாரிக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், " இஸ்லாமிய மத நம்பிக்கையின் பிரகாரம் பெண்கள் சைக்கிள் ஓடுவது விரும்பத்தக்கதல்ல என்று எமது ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறோம்." என்பது தான். இறைதூதர் முகமது நபி வாழ்ந்த காலத்தில் சைக்கிள் இருந்ததாக நாம் அறியவில்லை. பெண்கள் சைக்கிள் ஓடக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு, பெருமளவு சைவத் தமிழர்கள் வாழும் யாழ் குடாநாட்டிலும் இருந்துள்ளது. (கடந்த 30 வருடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன.)

முஸ்லிம்கள் சைக்கிளை விரும்பாததற்கு மதக் கட்டுப்பாடு தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செய்தியை அறிவித்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே மேலதிக விளக்கமும் கிடைக்கிறது. காரில் வீதிவலம் வருவது, வயதுக்கு வராவிட்டால் ஸ்கூட்டரில் ஸ்டன்ட் காட்டுவது, என்பது இளைய தலைமுறையின் நாகரீக மோகம். முஸ்லிம் இளைஞர்களும் உலகை ஆட்டிப்படைக்கும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகள் தான். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட "டூவீலரில்" போவது மத்திய தர வர்க்க "ஸ்டேடஸ்". சைக்கிளில் போனால் சமூகத் தாழ்வாக கருதிக் கொள்வார்கள். ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் தாம். ஜாலியாக காரில் பறக்கும் நாகரீக இளைஞர்களிடம் "வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவினால் சுற்றுச் சூழல் மாசடைவது" பற்றி போதிக்க முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

மத நம்பிக்கையாளர்களை விட பண நம்பிக்கையாளர்கள் பெருகி வரும் காலம் இது. முதலாளித்துவ கலாச்சாரம் இன்று அனைத்து மதங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கலாச்சாரமும், அதற்குள் துணைக் கலாச்சாரங்களும் இருப்பதாக வணிகத்துறை பாடநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. துணைக் கலாச்சாரங்களின் "தேவைகளை" பூர்த்தி செய்வதற்காக மூலதனம் ஹலால் சந்தையைக் கைப்பற்ற துடிக்கின்றது. அது முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் விட்டு வைக்கவில்லை. சவூதி அரேபியா உலகம் முழுவதும் மசூதி கட்டிக் கொடுக்கும் "ரியல் எஸ்டேட்" வியாபாரத்தில் இறங்கி இருப்பது இரகசியமல்ல. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவின் மூலதனம் பாய்வதைத் தடுப்பதற்காக, அரசாங்கமே மசூதி கட்ட நிதி வழங்குகின்றது. சவூதியின் (கடும்போக்கு) "வஹாபிஸ" இஸ்லாமுக்கு போட்டியாக, (தாராளவாத) "ஐரோப்பிய" இஸ்லாம் உருவாக்கப்படுகின்றது. சபாஷ்! சரியான போட்டி!!


________________________________________

உசாத்துணை :
Online Islamic sex-shop opens for business
"ஹலால் சைக்கிள்" பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தி அறிக்கை

அரபு விலை மாதர்கள் - அவலங்களின் குழந்தைகள்

மொரோக்கோவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நதியா வீதிக்கு வந்த பொழுது அவளுக்கு 15 வயது. பிள்ளைகளை பராமரிக்க முடியாத, மதுவுக்கு அடிமையான தந்தை அவளை வீதிக்கு அனுப்பியிருந்தார். "எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்" என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ராபாத் நகரின் தெருக்களில் நின்று 20 யூரோக்கு உடலை விலை பேசுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போது நதியா பன்னிரண்டு வருட அனுபவமுள்ள பாலியல் தொழிலாளி. ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலிமா ஹோட்டல், பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். நதியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மொரோக்கோவில் பொதுவாகவே கணவன் துணையின்றி குழந்தை வளர்க்கும் தாய்மாரை விபச்சாரிகளுக்கு சமமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் நதியா வேறு வேலை தேடிச் செல்லும் பொழுது, முதலாளி அவளுடன் படுக்கக் கேட்கிறார். மறுத்தால் வேலை கிடைக்காது.

செனிப்பின் கதை இன்னொரு வகையானது. செனிப் கருவுற்றவுடன் அவளைக் காதலித்தவன் கைவிட்டு விட்டான். கல்யாணமாகாமலே குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குடும்பத்திற்கு வேண்டப்படாதவள். பெற்றார் அவளைக் குடிமுழுகி விட்டார்கள். வாழ வழியின்றி நிர்க்கதியாக தவித்த நேரம், ஒரு நண்பி விபச்சாரத் தொழிலை அறிமுகப் படுத்தினாள். செனிப்பை பொறுத்தவரை, மொரோக்கோவில் பாலியல் தொழில் செய்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. "நீங்கள் கருதுவது போல அல்லாது, மொரோக்கோ சமூகம் திறந்த மனப்பான்மை கொண்டது. பகிரங்கமாக விளம்பரம் செய்யாத வரையில் இங்கே எல்லாமே சாத்தியம்." என்று கூறினாள். செனிப்புக்கு புதிய காதலன் ஒருவன் மூலம் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. புதிய காதலன் ஒரு வாடிக்கையாளனாக அறிமுகமானான். அன்பொழுகப் பேசினான். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தான். ஆனால் மொரோக்கோவில் விபச்சாரிகளை காதலிக்கும் ஆண்கள் பலர் ஒன்றில் இலவச பாலுறவுக்காக, அல்லது பணத்திற்காக சுரண்ட நினைக்கின்றனர்.

மொரோக்கோவின் சமூகவியல் அறிஞர் Soumaya Naamane Guesous, பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார். அவரது நூலான "அனைத்து வெட்கங்களும் போய் விட்டன. மொரோக்கோவில் பெண்களின் பாலுறவு"(Au-dela de toute pudeur, la sexualite feminine au Maroc), இதுவரை பதினேழு பதிப்புகள் வந்து விட்டன. சுமயா கூறுகிறார்: "மறந்து விடாதீர்கள். மொரோக்கோ கடுமையான இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட நாடாக பேரெடுத்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் பல விடயங்கள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. அடித்தட்டு ஏழை மக்கள் மத்தியில், இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலை புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது. இறைவன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, அல்லது அவள் ஒருத்தி தானே குடும்பத்தை பார்க்கிறாள் என்றோ பரிதாபப் படுவார்கள்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்களை எந்த வகையிலும் சேர்க்க முடியாது. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள், பணக்கார வீட்டு இளைஞர்களின் பாலியல் வெறிக்கு இரையாகின்றனர். அடங்கிப் போக வேண்டிய நிலையில், ஒரு தடவை கர்ப்பமானால் வாழ்க்கையே முடிந்து விடும். அதன் பிறகு, பாலியல் தொழில் செய்து பிழைப்பதை தவிர அந்த அபலைப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை.

முன்பெல்லாம் ஒரு விபச்சாரியை அடையாளம் கண்டுபிடிப்பது இலகு. கவர்ச்சியான தோற்றத்துடன் நகரங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் காத்திருப்பார்கள். மொரோக்கோவில் அட்லஸ் மலைப் பிரதேசக் கிராமங்கள் சில திறந்த வெளி விபச்சார விடுதிகளாக அறியப்பட்டன. இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், உலகமயமாக்கலும் மரபுவழி விபச்சாரத்திற்கு முடிவு கட்டின. இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு பெருகுவதால் அரசாங்கம் வெளிப்படையான பாலியல் தொழிலை அடக்கி விட்டது. அந்த இடத்தில் மேற்குலக மோகமும், உலகமயமாக்கலும் புதிய வகை விபச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நவீன விபச்சாரிகளை, மரபு வழி விபச்சாரிகளைப் போல இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஆச்சாரமான குடும்பப் பெண் போல தோற்றமளிப்பார்கள். பாரிலும், டிஸ்கோதேக்கிலும் சந்திக்கும் பெண்ணுடன் சில நிமிட உரையாடலுக்கு பின்னர் தான், அவள் ஒரு விபச்சாரி என்று தெரிய வரும். செல்லிடத் தொலைபேசி, இணையங்களின் பாவனை, பாலியல் சந்தையை பலரறியா வண்ணம் பரப்பி வருகின்றது. தகவல் தொழில்நுட்ப வசதி காரணமாக, பாலியல் தொழில் முன்னரை விட பல்கிப் பெருகியுள்ளது.

உலகமயமாக்கலின் பின்னர் பாலியல் தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில் ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின் கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத் தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக இருக்கிறார்கள்.

காசாபிளாங்கா நகரில் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்கு
போய்ப் 
பார்த்தால் தெரியும். பணக்கார ஆண்கள் தமது "நண்பிகளுக்கு" நகைகளை பரிசாக வாங்கிக் கொடுக்கிறார்கள். பகுதி நேர பாலியல் தொழிலாளர்கள் பெருகி வருவதால், மொரோக்கோ பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. டிஸ்கோ நடன விடுதிகள் லாபம் சம்பாதிக்கின்றன. கூட்டிச் செல்லும் டாக்சி ஓட்டுனருக்கு, வழியில் மறிக்கும் போலீஸ்காரருக்கு, அடுக்குமாடி கட்டிட காவலாளிக்கு, ஹோட்டல் வரவேற்ப்பாளருக்கு என்று பலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதைவிட கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள், நகைக் கடைகள் என்பன பக்க விளைவாக லாபம் சம்பாதிக்கின்றன.

இத்தகைய நாகரீக போக்கு வசதியற்ற அடித்தட்டு வர்க்க பெண்களுக்கு மட்டும் பொதுவானதல்ல. படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள், தாம் விபச்சாரம் செய்வதாக கூறுவதில்லை. ஆனால் தமது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்திற்காக பல ஆண்களுடன் உறவு கொள்கின்றனர். மனேஜர் மட்டத்தில் தொழில் புரியும் படித்த பெண் ஒருவர், பணத்திற்காக உடல் உறவு கொள்வதை ஏற்றுக் கொண்டார். அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். ஏனென்றால் மேல்தட்டு தோற்றப் பொலிவை பராமரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. தனக்கென வாழ்க்கைத்துணையை வைத்திருக்கும் பெண்கள் கூட, மேலதிக பணத் தேவைக்காக வேறு ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். மாதாந்த ஊதியத்தை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் அதில் என்ன தவறு? என்று கேட்கின்றனர்.

எண்ணைவள வளைகுடா நாடுகளைச் சேர்ந்த, பணக்கார அரேபிய ஆண்களின் காம வேட்கையை பூர்த்தி செய்யும் இடமாக மொரோக்கோ மாறியுள்ளது. முன்பு லெபனான் அந்தப் பெருமையை பெற்றிருந்தது. தங்களது நாட்டில் தமது பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கும் இந்த வளைகுடா அரேபியர்கள், சுதந்திரமாக திரியும் லெபனான், மொரோக்கோ அழகிகளை வேட்டையாடுகிறார்கள். 1975 ல் இருந்து தீராத உள்நாட்டு யுத்தத்திற்குள் லெபனான் விழுந்து விட்டதால், அவர்கள் தற்போது மொரோக்கொவை குறிவைத்துள்ளனர். இந்த திமிர் பிடித்த பணக்கார வளைகுடா அரேபியர்கள், மொரோக்கோவில் பலரது வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். 
ஒரு முறை இரவு விடுதி ஒன்றினுள் புகுந்த சவூதி பணக்காரன், அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்பினான். அதற்காக எல்லா நுளைவுச்சீட்டுகளையும் வாங்கினான். நல்ல வேளையாக அங்கிருந்த மொரோக்கோ பணக்காரன் ஒருவன் நுளைவுச்சீட்டுகளுக்கு இரு மடங்கு விலை கொடுத்து சவூதிக்காரனை விரட்டி விட்டான். பாலியல் தொழிலில் ஈடுபடும் மொரோக்கோ பெண்கள் கூட வளைகுடா வாடிக்கையாளர்களை விரும்புவதில்லை. "ஐரோப்பியர்களும், ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ ஆண்களும் கண்ணியமாக நடத்துவார்கள். பணக்கார வளைகுடா ஆண்கள் எங்களை விலங்குகளாக கருதுகிறார்கள். அவர்களிடம் நிறையப் பணம் இருக்கலாம். ஆனால் எங்களை பொம்மை போலத் தான் நடத்துவார்கள்."

(நன்றி : NRC Handelsblad, 24 aug. 2010)

(இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை.)
 நன்றி கலையகம்


Friday, April 8, 2011

அன்பான உங்களிற்கு எமது வாழ்த்துக்கள்



நாம் வாழ்க்கையை சுவாசிக்கும் மனிதர்கள்
மரணித்த மனிதர்களுடனும் வாழும் வித்தை தெரிந்தவர்கள்
மதங்களிற்கும் அப்பால் மானுட ஆலயத்தில் தொழுபவர்கள்

உங்கள் வீட்டின் படிகட்டாக நாங்களோ அல்லது
எங்கள் வீட்டின் கூரையாக நீங்களோ இருப்பதில் 
எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.